Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Fri, 24 July 2020 10:21:02 AM

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்தது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

world,corona virus,corona prevalence,corona death ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 95 லட்சத்து 34 ஆயிரத்து 899 பேர் குணமடைந்தோர் வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா காரணமாக 1,47,333 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்து 482 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|