Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 7.28 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 7.28 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sun, 09 Aug 2020 11:14:58 AM

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 7.28 லட்சத்தைத் தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.28 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 1.97 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

world,corona death,corona virus,corona prevalence ,உலகம், கொரோனா மரணம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

தற்போது உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.27 கோடியைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றுதல் ஆகியவை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வலியுறுத்தப்படுகிறது.

Tags :
|