Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் புதிதாக பரவும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை சுமார் 12 சதவீதம் குறைவு ... WHO

உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் புதிதாக பரவும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை சுமார் 12 சதவீதம் குறைவு ... WHO

By: vaithegi Fri, 09 Sept 2022 4:42:41 PM

உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் புதிதாக பரவும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை சுமார் 12 சதவீதம் குறைவு   ...   WHO

இந்தியா: உலக சுகாதார அமைப்பு கொரோனா பரவல் பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே நாடு முழுவதும் பதிவான வழக்குகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் புதிதாக பரவும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 4.2 மில்லியனுக்கும் குறைவான தொற்று பதிவாகியுள்ளதாகவும், சுமார் 13,700 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் இறப்பு விகிதம் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

who,corona ,WHO ,கொரோனா

இதையடுத்து ஆனாலும், அதற்கு அடுத்த வாரமும் இதைப்போல தொற்று பரவல் வீழ்ச்சியடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே இதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அவர்கள்;அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் கொரோனா தொற்று உயர்ந்து வருவதாகவும் WHO அறிவித்துள்ளது. குறிப்பாக, பிப்ரவரி மாதத்திலிருந்து எடுத்த கணக்கெடுப்பின்படி இறப்பு விகிதம் நாடு முழுவதும் 80 சதவீதம் குறைந்து இருந்தாலும் கூட ஒவ்வொரு 44 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனா தொற்றினால் பலியாகி வருவதாகவும் அறிக்கை வெளியாகி உள்ளது.

Tags :
|