Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Fri, 29 May 2020 11:20:00 AM

உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது

தினம், தினம் கொரோனாவால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 59 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,05,415 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 3,62,024 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,79,691 ஆக உள்ளது.

corona,india,world size,9th place,impact ,கொரோனா, இந்தியா, உலக அளவு, 9வது இடம், பாதிப்பு

சிகிச்சையில் இருப்பவர்களின் என்ணிக்கை 29, 63,700 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 17,68,461 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,03,330 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், லண்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன. கொரோனா உயிரிழப்பில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 9வது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை 1,65,386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு 4,711 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 70,920 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர்.

Tags :
|
|