Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 97 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 97 லட்சமாக உயர்வு

By: Nagaraj Fri, 26 June 2020 11:57:34 AM

உலக அளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 97 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் அமெரிக்கா அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகிறது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் கொரோனா பரவியுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.90 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்து 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

america,world size,corona,impact,figure ,அமெரிக்கா, உலக அளவு, கொரோனா, பாதிப்பு, எண்ணிக்கை

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10.50 லட்சத்தை நெருங்குகிறது .

Tags :
|
|