Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

By: Nagaraj Thu, 09 July 2020 11:12:43 AM

உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை... உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இதுவரை 70 இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இதேபோல, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சத்து 66ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

corona,healed,7 million,statistics ,கொரோனா, குணமடைந்தவர்கள், 7 மில்லியன், புள்ளிவிபரம்

மேலும், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 5 இலட்சத்து 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அங்கு, 31 இலட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தப் பட்டியலில், பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகள் உள்ளன.

Tags :
|
|