Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sun, 14 June 2020 09:38:46 AM

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது.தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் உள்ள பல்வேறு நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

corona,worldwide,america,china ,கொரோனா, சீனா,அமெரிக்கா,முகக்கவசம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் வேலையை இழந்துள்ளனர்.

Tags :
|