Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Sun, 07 June 2020 10:46:56 AM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 69.66 லட்சத்தைக் கடந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

corona virus,the number of kills,china,number of healers ,கொரோனா வைரஸ்,பலி எண்ணிக்கை,சீனா,குணமடைந்தோர் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டி விட்டது. மேலும், இதனால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தற்போது, கொரோனாவால் பாதிப்படைந்து சிகிச்சை பெறுபவர்களில், 53 ஆயிரத்து 575-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|