Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Sun, 26 July 2020 6:22:06 PM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைக் கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.61 கோடியை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா நாடுகள் உள்ளன.

world,corona recover,corona prevalence,corona virus ,உலகம், கொரோனா மீட்பு, கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.47 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|