Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை கடந்தது

By: Karunakaran Tue, 11 Aug 2020 10:49:45 AM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் இதுவரை 7.36 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

world,corona virus,corona death,corona prevalence ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையினால் பலர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு, பலி மற்றும் குணமடைந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் அதிகம் பதித்து நாடுகளில் பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|