Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4.35 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4.35 லட்சமாக உயர்வு

By: Nagaraj Mon, 15 June 2020 12:14:09 PM

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4.35 லட்சமாக உயர்வு

4.35 லட்சம் பேர் பலி... உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் கொரோனா பரவி மக்களை வெகு அச்சத்தில் வைத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.35 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்து 95 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

corona,worldwide,impact,madras,defense force ,
கொரோனா, உலக அளவு, பாதிப்பு, சென்னை, பாதுகாப்பு படை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஐஐடி வளாகம், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
|
|
|