Advertisement

ஆஹா சூப்பரு... மதுபானப்பிரியர்கள் கொண்டாட்டம்

By: Nagaraj Mon, 21 Nov 2022 7:05:13 PM

ஆஹா சூப்பரு... மதுபானப்பிரியர்கள் கொண்டாட்டம்

கனடா: கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் காலை 7 மணிக்கே மதுபானசாலைகள் மற்றும் ரெஸ்டான்ட்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மதுபானப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் கத்தாரில் நடக்கும் கால்பந்து போட்டிகள்தானாம்.

கட்டாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டித் தொடரை கண்டு களிக்கும் ரசிகர்களுக்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாணம் தழுவிய ரீதியில் இவ்வாறு மதுபான விற்பனை செய்ய விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

canada,soccer fans,morning,liquor road,permit,controversy ,கனடா, கால்பந்து ரசிகர்கள், காலை, மதுபான சாலை, அனுமதி, சர்ச்சை

கட்டாருக்கும் ஒன்ராறியோவிற்கும் இடையில் எட்டு மணிநேரங்கள் நேர வித்தியாசம் காணப்படுகின்றது. கனேடிய கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகாலை வேளையில் சில போட்டிகளை கண்டுகளிக்க நேரிட்டுள்ளது.

இதனால் மதுபானசாலைகள் மற்றும் ரெஸ்டுரன்ட்களில் வழமையான நேரத்திற்கு முன்னரே மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாகாண அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு மதுபான விற்பனையாளர்கள் நன்றி பாராட்டியுள்ளனர். இருப்பினும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த அனுமதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|