Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சியோமி நிறுவனம் குறைந்த விலையில் ரெட்மிபுக் லேப்டாப் மாடல்களை உருவாக்கம்

சியோமி நிறுவனம் குறைந்த விலையில் ரெட்மிபுக் லேப்டாப் மாடல்களை உருவாக்கம்

By: Karunakaran Sun, 14 June 2020 2:24:16 PM

சியோமி நிறுவனம் குறைந்த விலையில் ரெட்மிபுக் லேப்டாப் மாடல்களை உருவாக்கம்

சியோமி நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை ரெட்மிபுக் மாடல்களை அறிமுகம் செய்யலாம். சியோமி நிறுவனம் தனது எம்ஐ நோட்புக் சீரிஸ் மாடலை சில நாட்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன்படி, சியோமி நிறுவனம் தனது பட்ஜெட் ரக லேப்டாப் மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம்.

ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டுக்கான பிரிவில் இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இவை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த லேப்டாப்களின் வித்தியாசமான வேரியண்ட்களை சியோமி அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

xiaomi,redmibook,laptop,india ,சியோமி,ரெட்மிபுக், லேப்டாப்,இந்தியா

ஸ்மார்ட்போன்களை போலவே இந்த லேப்டாப்களும் இருவேறு சீரிஸ் மாடல்களை சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம். பல்துறை பணிகள் முழுமையாக ஆன்லைன் வசம் மாறியுள்ளதால் லேப்டாப்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

புதிதாக லேப்டாப் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் பட்ஜெட் ரக லேப்டாப்களையே தேர்வு செய்வதால், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள சியோமி திட்டமிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பட்ஜெட் ரக சியோமி லேப்டாப்களை வாங்குவது அதிகரிக்கும்.

Tags :
|
|