Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரிணமுல் கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா... ஜனாதிபதி வேட்பாளரா?

திரிணமுல் கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா... ஜனாதிபதி வேட்பாளரா?

By: Nagaraj Tue, 21 June 2022 6:25:03 PM

திரிணமுல் கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா... ஜனாதிபதி வேட்பாளரா?

புதுடில்லி: ஜனாதிபதி வேட்பாளரா?... முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். பெரிய நோக்கத்திற்காக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளதால், எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கலாம் என யூகங்கள் கிளம்பி உள்ளன.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18 ல் நடக்கிறது. அதில் பா.ஜ., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. இந்த தேர்தலில், சரத்பவாரை வேட்பாளராக்க முயற்சி நடந்தது. ஆனால், அவர் ஏற்கவில்லை.

இது தொடர்பாக கடந்த 15ம் தேதி டில்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, பரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இருவரும் மறுத்துவிட்டனர். அடுத்த கட்டமாக இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

yashwant sinha,trinamool,party,vice president,finance minister,vajpayee ,யஷ்வந்த் சின்ஹா, திரிணமுல், கட்சி, துணைத்தலைவர், நிதியமைச்சர், வாஜ்பாய்

இந்நிலையில், கடந்த 2021ல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திரிணமுல் காங்கிரசில் எனக்கு அளித்த மரியாதைக்கும், மதிப்புக்கும் மம்தா பானர்ஜிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இப்போது பெரிய தேசிய நோக்கத்திற்காக கட்சியில் இருந்து விலகி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எனது நடவடிக்கையை மம்தா அங்கீகரிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனால் அவர், ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் அவர் களமிறங்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

வாஜ்பாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்த போது, நிதியமைச்சர் பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹா, கடந்த 2018 ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். 2021ல் திரிணமுல்லில் சேர்ந்த அவருக்கு, கட்சியின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

Tags :
|