Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த எடியூரப்பா உத்தரவு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த எடியூரப்பா உத்தரவு

By: Karunakaran Tue, 23 June 2020 11:53:55 AM

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த எடியூரப்பா உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் பெங்களூருவில் 196 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

coronavirus,karnataka,yeddyurappa,intensification of curfews ,கொரோனா பரவல்,ஊரடங்கு விதிமுறை, எடியூரப்பா,கர்நாடகா

இந்த கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகள் உள்ள பகுதிகளை முற்றிலுமாக மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். பக்கத்து தெருக்களையும் முடக்க வேண்டும். சீல் வைக்கப்படும் பகுதிகளில் எல்லைகளை வரையறுக்க வேண்டும். பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளில் பாதிப்பு இருந்தாலும் இதே போல் அந்த பகுதிகளை ‘சீல்’ வைக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெங்களூருவில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்பதால், அந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், கொரோனா தடுப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எடியூரப்பா கூறினார்.

Tags :