Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை

By: vaithegi Fri, 09 June 2023 3:23:02 PM

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை


கேரளா: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை .... கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முதலில் அறிவித்திருந்தது. எனினும் ஜூன் 5-ம் தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால், அது தாமதமாக தொடங்கியதாக கருதப்படும். அந்த வகையில், இந்தாண்டு 1 வாரம் தாமதமாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியியது.

இதையடுத்து அதன்படி நேற்று கேரளா , தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.கோழிக்கோடு, அந்தமான் பகுதியில் கடந்த மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தாமதமாக தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

yellow warning,monsoon , மஞ்சள் எச்சரிக்கை,பருவமழை

இந்நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம்,

இதனை அடுத்து இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12ம் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Tags :