Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கனமழை... தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை

சென்னையில் கனமழை... தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை

By: Monisha Thu, 29 Oct 2020 11:29:59 AM

சென்னையில் கனமழை... தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை

தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நெல்லை, விருதுநகர், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 2017 நவம்பருக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. பெரும்பாலான சாலைகளில் தண்ணீல் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

chennai,heavy rain,tamil nadu,yellow alert,warning ,சென்னை,கனமழை,தமிழ்நாடு,மஞ்சள் அலர்ட்,எச்சரிக்கை

ஆனால், பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வடிகால் பாதைகளை அடைத்திருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :