Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழைநீரில் மஞ்சள் தவளைகள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

மழைநீரில் மஞ்சள் தவளைகள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

By: Nagaraj Tue, 14 July 2020 5:59:13 PM

மழைநீரில் மஞ்சள் தவளைகள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

மத்தியபிரசேதம்: மழை நீரில் மஞ்சள் தவளைகள்... மழைநீரில் வந்த மஞ்சள் தவளைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்தியபிரதேசம் மாநிலம் நரசிங்கபூர் என்னும் பகுதியில் பெய்த மழையில் ஏரளாமான மஞ்சள் தவளைகள் காணப்பட்டன. உடனே இதை பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள் உயிரியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

yellow frog,madhya pradesh,rainwater,viral video ,மஞ்சள் நிற தவளை, மத்தியபிரதேசம், மழைநீர், வைரல் வீடியோ

உடனே இது குறித்து கூறிய ஆய்வாளர்கள், மஞ்சள் நிறத்தில் உள்ள தவளைகள் Indian Bullfrog வகையை சேர்ந்தது என்றனர். ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் மழை பெய்யும் நேரத்தில் இனப்பெருக்கத்திற்காக தனது நிறத்தை மாற்றுவதாக தெரிவித்தனர்.

இந்த மாதங்களில் தவளைகள் இனச்சேர்க்கை நடைபெறும் என்பதால், பெண் தவளைகள் பச்சை நிறமாகவும், ஆண் தவளை மஞ்சள் நிறமாக மாறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மஞ்சள் தவளைகள் மழை நீரில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :