Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏமன் நாட்டுக்கு அவசர சிகிச்சை உதவி தேவை; ஐ.நா. வலியுறுத்தல்

ஏமன் நாட்டுக்கு அவசர சிகிச்சை உதவி தேவை; ஐ.நா. வலியுறுத்தல்

By: Nagaraj Sun, 24 May 2020 10:55:05 AM

ஏமன் நாட்டுக்கு அவசர சிகிச்சை உதவி தேவை; ஐ.நா. வலியுறுத்தல்

ஏமன் நாட்டுக்கு அவசர சிகிச்சை உதவி தேவை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இதையடுத்து எல்லைகள் அற்ற மருத்துவர்கள் சங்கம் ஏமன் நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளது.

ஏமனில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஏமன் நாட்டுக்கு அவசர சிகிச்சை உதவி தேவை என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும்
ஏமனில் கொரோனா சமூக பரவல் துவங்கிவிட்டது ஐநா செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே அச்சம் தெரிவித்துள்ளார்.

corona impact,financial aid,un,social dissemination,key results ,கொரோனா பாதிப்பு, நிதிஉதவி, ஐ.நா., சமூக பரவல், முக்கிய முடிவுகள்

இதற்கிடையில் ஏமனில் சுகாதாரத் துறை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு பிபிஇக்கள் வெண்டிலேட்டர்கள் இல்லை. இத்தகைய நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏமன் நாட்டிற்கு சர்வதேச உதவியாளர்களை ஐநா அனுப்பி வைத்துள்ளது.

கடந்த இரு வாரங்களில் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு 68 பேர் பலியாகி உள்ளனர். இதனால் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் சங்கம் ஏமன் நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு சரியாக உணவு, இருப்பிடம் கிடைப்பதில்லை. சவுதி அரசு ஏமனுக்கு உதவி வரும் நிலையில் மேற்காசிய நாடுகளில் மிகவும் பாதிப்புக்கு உள்ளான நாடாக ஏமன் விளங்கி வருகிறது.

கடந்த ஆண்டு 4 பில்லியன் டாலர் உதவித்தொகையை ஐ.நா., ஏமன் நாட்டிற்கு வழங்கியது. தற்போது ஐநா 2 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க உள்ளது. இதற்கிடையில் சவுதி அரேபியா வரும் ஜூன் 2ம் தேதி அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஏமனில் ஏற்பட்டுள்ள நிலையை சீராக்க இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Tags :
|