Advertisement

நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்தது

By: vaithegi Thu, 18 May 2023 10:46:57 AM

நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்தது

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாகவே வெயில் சுட்டெரித்து கொண்டு வருகிறது. நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில் சென்னையில் 109 டிகிரியும், வேலூரில் 106 டிகிரியும் பதிவானது.

அதேபோன்று, இன்றும் வெப்பம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுவுள்ளது.

vail,meteorological centre,heat ,வெயில் ,வானிலை ஆய்வு மையம்,வெப்பம்

மேலும் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

இதையடுத்து தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 21-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|