Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யோகா, உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்: மத்திய அரசின் அன்லாக் 3.0 விதிமுறைகள் வெளியானது

யோகா, உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்: மத்திய அரசின் அன்லாக் 3.0 விதிமுறைகள் வெளியானது

By: Nagaraj Wed, 29 July 2020 8:44:59 PM

யோகா, உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்: மத்திய அரசின் அன்லாக் 3.0 விதிமுறைகள் வெளியானது

மத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் பற்றி தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த அன்லாக் 2.0 வரும் 31ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து சற்றுமுன் அன்லாக் 3.0 விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பின்வருமாறு:

relaxation,yoga,sports competition,swimming pool,announcemen ,தளர்வுகள், யோகா, விளையாட்டு போட்டி, நீச்சல் குளம், அறிவிப்பு

இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு ஆகஸ்ட் 5 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்காது. சுதந்திர தின கொண்டாடட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் சமூக இடைவெளியுடன் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்

திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி இல்லை. இவைகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|