Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் யோகா கட்டாயம்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் யோகா கட்டாயம்

By: vaithegi Sun, 25 Sept 2022 3:32:20 PM

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் யோகா கட்டாயம்

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயமாக்கப்படும் என்ற உத்தரவு விரைவில் அமலாக உள்ளது. விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பது, விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மாநிலத்தின் கடைக்கோடி பகுதியிலும் உள்ள விளையாட்டு மீது ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இதனை அடுத்து மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலர் நவ்நீத் சேகல் அவர்கள் இதுகுறித்து , ‘5 முதல் 14 வயது வரை உள்ள திறமை வாய்ந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் ஆர்வம் மற்றும் விளையாட்டில் கலந்து கொள்ளும் பங்களிப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

yoga,uttar pradesh ,யோகா ,உத்தரபிரதேசம்


மேலும்,லக்னோவிலுள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரியை 3 விளையாட்டுகளுக்கான சிறப்பு மையமாக (CoE) மேம்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த கல்லூரிகளில் விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு இதழியல், விளையாட்டு சட்டம், விளையாட்டு தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட படிப்புகள் இளைஞர்களுக்காக நடத்தப்படும்’ என கூறியுள்ளார்.

இதையடுத்து மேலும் அவர் கூறியதாவது, ‘தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் 20 சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க இந்த கல்லூரிகள் உறுதுணையாக இருக்கும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட விளையாட்டு மையம் அமைத்து இளம் திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்’ என கூறியுள்ளார்.

மேலும், ‘அனைத்து மாவட்ட தலைமையகங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் யோகா பயிற்சி மற்றும் பயிற்சிக்கான வசதிகள் வழங்கப்படும். உத்தரப்பிரதேச விளையாட்டு மேம்பாட்டு நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Tags :
|