Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யோகி ஆதித்யநாத் அரசாங்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்துகிறது - பிரியங்கா காந்தி

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்துகிறது - பிரியங்கா காந்தி

By: Karunakaran Wed, 14 Oct 2020 3:00:20 PM

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்துகிறது - பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளம்பெண், உயர் வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் கற்பழித்து கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்நிலையில், அங்குள்ள கோண்டா நகரத்திற்கு அருகே தூங்கிக்கொண்டிருந்த தலித் வகுப்பை சேர்ந்த 3 சகோதரிகள் மீது திராவகம் வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அக்காளுடன் தூங்கிக்கொண்டிருந்த அவரது சகோதரிகளான 2 சிறுமிகளும் காயம் அடைந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

yogi adityanath,crimes,women,priyanka gandhi ,யோகி ஆதித்யநாத், குற்றங்கள், பெண்கள், பிரியங்கா காந்தி

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்து வரும் உத்தரபிரதேச அரசை, காங்கிரஸ் பெண் தலைவரான பிரியங்கா காந்தி கடுமையாக கண்டித்து உள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத் அரசாங்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்துவதும், அரசியல் நோக்கத்துடன் குற்றவாளிகளை பாதுகாப்பதுமே அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமாகும் என்று கூறி உள்ளார்.

Tags :
|
|