Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான இடத்தை நேரில் ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான இடத்தை நேரில் ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

By: Karunakaran Sat, 25 July 2020 8:02:58 PM

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான இடத்தை நேரில் ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, ராமர் கோவில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கின. ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தை தேர்வு செய்யப்பட்டு மார்ச் மாதம் பூஜை நடைபெற்றது.

அதன்பின், கட்டுமானப் பணியை தொடங்க ஏதுவாக,ராமர் சிலை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ram temple,ayodhya,yogi adityanath,uttar pradesh ,ராம் கோயில், அயோத்தி, யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசம்

இந்த அடிக்கல் நாட்டு விழாவில், பாஜக மற்றும் விஎச்பி அமைப்பின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டுவிழா தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச முதல் மந்திரி அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அதன்பின், ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகளுடனும் அடிக்கல் நாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

Tags :