Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Mon, 04 July 2022 10:55:42 AM

தமிழக தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல்  நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாக இருக்கும் 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

contemporary teacher jobs,apply ,தற்கால ஆசிரியர் பணி,விண்ணப்பிக்கலாம்

இந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இதனால் தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :