Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • +2 மதிப்பெண் மறுகூட்டல் , மறுமதிப்பீட்டுக்கான விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

+2 மதிப்பெண் மறுகூட்டல் , மறுமதிப்பீட்டுக்கான விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Tue, 09 May 2023 09:48:46 AM

+2 மதிப்பெண் மறுகூட்டல் , மறுமதிப்பீட்டுக்கான விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இன்று முதல் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் .... தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இத்தேர்வுகளில் 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 94.03 ஆக பதிவாகி உள்ளது.

apply,rejoinder,revaluation ,விண்ணப்பிக்கலாம், மறுகூட்டல் , மறுமதிப்பீட்டு

இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.இதையடுத்து இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடைத்தாள் மற்றும் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் தனித்தேர்வர்கள் , தாங்கள் எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் இன்று காலை 11:00 மணி முதல் சனிக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளது.

Tags :
|