Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவப்படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மருத்துவப்படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

By: Nagaraj Thu, 29 June 2023 1:06:14 PM

மருத்துவப்படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்... தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது, அதன் முடிவு கடந்த 13 ஆம் தேதி வெளியானது.

website,apply,medical course,tamil nadu ,இணைய தளம், விண்ணப்பிக்கலாம், மருத்துவப்படிப்பு, தமிழகம்

இந்நிலையில் தமிழ்நாட்டில் 2023-2024 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஜூலை 10ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|