Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

By: vaithegi Sun, 05 Mar 2023 9:39:39 PM

நீட் தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் விலக்குக்கோரி தமிழக அரசு சட்ட போராட்டங்களை நடத்தி கொண்டு வருகிறது.

இதையடுத்து நீட் தேர்வால் மருத்துவக் கல்வி என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது

national examination agency,neet exam ,தேசிய தேர்வு முகமை,நீட் தேர்வு

எனவே இதற்குக் காரணம் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு என்பது பள்ளிப்பாடத்திட்டத்தைக் கடந்து, தனிப்பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது தான். இந்தநிலையில் நடப்பாண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு வரும் மே மாதம் 7 -ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்க நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தகவல் அறிவித்துள்ளது. எனவே (https://neet.nta.nic.in/) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :