Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இணையதளம் மூலம் எல்.கே.ஜி. வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; முதன்மை கல்வி அலுவலர் தகவல்

இணையதளம் மூலம் எல்.கே.ஜி. வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; முதன்மை கல்வி அலுவலர் தகவல்

By: Monisha Mon, 24 Aug 2020 1:48:51 PM

இணையதளம் மூலம்  எல்.கே.ஜி. வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; முதன்மை கல்வி அலுவலர் தகவல்

பள்ளிகல்வித்துறையின் இணையதளம் மூலம் எல்.கே.ஜி. வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 2020-2021-ம் கல்வி ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. தொடக்க நிலை வகுப்பில் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnsc-h-o-ols.gov.in என்ற பள்ளிகல்வித்துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வட்டார கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 25-ந்தேதி வரை இணையதளம் வழியாக அனுப்பலாம்.

lkg,free compulsory education,children,school education,internet ,எல்கேஜி,இலவச கட்டாய கல்வி,குழந்தைகள்,பள்ளிகல்வித்துறை,இணையதளம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 170 தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலக தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இணையவழியில் விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் இந்த திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய குழந்தைகளின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், குடும்ப வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார சான்று ஆகியவற்றுடன் வருகிற 27-ந்தேதி முதல் மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் ஏதேனும் ஒரு இடத்திற்கு நேரில் சென்று இணைய வழியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|