Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எனது மிகப்பெரிய சொத்து எது தெரியுங்களா? சச்சின் பைலட் தகவல்

எனது மிகப்பெரிய சொத்து எது தெரியுங்களா? சச்சின் பைலட் தகவல்

By: Nagaraj Sun, 11 June 2023 9:55:44 PM

எனது மிகப்பெரிய சொத்து எது தெரியுங்களா? சச்சின் பைலட் தகவல்

ஜெய்ப்பூர்: மக்கள் நம்பிக்கையும், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் அரசியலில் எனக்கு மிகப்பெரிய சொத்து என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது சிலையை திறந்து வைத்தார்.

அதன்பின், சச்சின் பைலட் கூறியதாவது:- என்னை பொறுத்தவரை, மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறுவதற்கு முன்னுரிமை அளிப்பேன்.

determination,people,sachin pilot,situation,struggle, ,உறுதி, சச்சின் பைலட், சூழ்நிலை, போராட்டம், மக்கள்

மக்கள் நம்பிக்கையும், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் அரசியலில் எனக்கு மிகப்பெரிய சொத்து. கடந்த 22 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.

மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் நான் எதையும் செய்யவில்லை. வரும் நாட்களில் உங்கள் நம்பிக்கைதான் எனக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கும். நான் அதை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக போராடுவேன்.

அவர்களுக்கு நீதி வழங்குவேன். ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் கமிஷன் கலைக்கப்பட்டு மீண்டும் அமைக்கப்பட வேண்டும். அரசுப் பணிகளுக்கான தேர்வுத் தாள் வெளியிடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|