Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேலில் 1,100 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட தங்க புதையலை கண்டுபிடித்த இளைஞர்

இஸ்ரேலில் 1,100 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட தங்க புதையலை கண்டுபிடித்த இளைஞர்

By: Karunakaran Wed, 26 Aug 2020 09:31:54 AM

இஸ்ரேலில் 1,100 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட தங்க புதையலை கண்டுபிடித்த இளைஞர்

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் தொழிற்பூங்கா உள்ளது. இதற்கு அருகே தொல்லியல் துறையினர் பல நாட்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் புதைத்திருந்த படிமங்களை தோண்டி பரிசோதனை செய்து வந்தனர்.

தன்னார்வலர்களில் ஒருவரான ஹொஹின் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டி ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, அங்கு அவருக்கு தங்கப்புதையல் கிடைத்துள்ளது. இந்த புதையலில் மொத்தம் 425 தங்க நாணயங்கள் இருந்தன. அவை அனைத்தும் 24 கேரட் தூயதங்கம் என தெரியவந்துள்ளது.

young man,gold treasure,israel,1100 years ago ,இளைஞன், தங்க புதையல், இஸ்ரேல், 1100 ஆண்டுகளுக்கு முன்பு

அவர் கண்டுபிடித்த தங்கத்தின் மொத்த எடை 845 கிராம் ஆகும். இந்த தங்கம் 1,100 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். இது, இஸ்ரேல், பாலஸ்தீன்ம், சிரியா, ஜோர்டான் போன்ற பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த அபாசித் ஹலிப்ஹேட் என்ற இஸ்லாமிய மன்னரின் காலத்தை சேர்ந்தாக இருக்கலாம் என இஸ்ரேல் தொல்லியல் துறை தெரிவித்துள்ளனர்.

இந்த தங்கப்புதையல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் தற்காலிக குடில்கள் அமைத்து இஸ்ரேல் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். தங்கப்புதையல் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்பபடுத்தியதாக ஹொஹின் என்ற இளைஞர் கூறியுள்ளார்.

Tags :
|