Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பசுமை மண்டலங்களில் உள்ள இளைஞர்கள் வேலை செய்ய முன்வர வேண்டும் - உத்தவ் தாக்கரே கோரிக்கை

பசுமை மண்டலங்களில் உள்ள இளைஞர்கள் வேலை செய்ய முன்வர வேண்டும் - உத்தவ் தாக்கரே கோரிக்கை

By: Monisha Wed, 20 May 2020 10:31:56 AM

பசுமை மண்டலங்களில் உள்ள இளைஞர்கள் வேலை செய்ய முன்வர வேண்டும் - உத்தவ் தாக்கரே கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தான் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில உள்ளது.

எனவே, மகாராஷ்டிராவில் 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவா் கூறியதாவது:-

india,corona virus,maharashtra,uddav thackeray,factories ,இந்தியா,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,உத்தவ் தாக்கரே,தொழிற்சாலைகள்

பசுமை மண்டலங்களில் உள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்களிடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்ய முன்வர வேண்டும். மராட்டியத்தை சுயசார்புடைய மாநிலமாக மாற்ற வேண்டும். மாநில அரசு ஏற்கனவே 70 ஆயிரம் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கொடுத்து உள்ளது. இதில் 50 ஆயிரம் தொழிற்சாலை செயல்பட தொடங்கி உள்ளன.

5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கி உள்ளனர். இதேபோல புதிய தொழிற்சாலைகள் தொடங்க நாம் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தயாராக வைத்து உள்ளோம். இடத்தை சொந்தமாக வாங்க முடியாதவர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அரசு நிலத்தை குத்தகைக்கு கொடுக்கும். மாநிலத்தில் கொரோனா பரவல் சங்கிலி உடையவில்லை. ஆனால் ஊரடங்கு காரணமாக நோய் பாதிப்பு பரவும் வேகம் குறைந்து உள்ளது. இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

Tags :
|