Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலவச பிளே ஸ்டேஷன்களை வழங்குவதாக அறிவித்த யூடியூபர் கைது

இலவச பிளே ஸ்டேஷன்களை வழங்குவதாக அறிவித்த யூடியூபர் கைது

By: Nagaraj Sat, 05 Aug 2023 8:22:05 PM

இலவச பிளே ஸ்டேஷன்களை வழங்குவதாக அறிவித்த யூடியூபர் கைது

நியூயார்க்: யூடியூபர் கைது... அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூடியூபர் ஒருவர் இலவசமாக பிளே ஸ்டேஷன்களை வழங்குவதாக அறிவித்ததார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ஏராளமான போலீசார் காயமடைந்தனர். யூடியூபில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட கை செனட் வீடியோ கேம் பிரியர்களிடையே மிகவும் பிரபலமான சோனி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளேஸ்டேசன்களை மேன்ஹட்டன் பூங்காவில் வைத்து இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்தார்.

youtuber arrested,riots,accusations,police,youths,rally ,யூடியூபர் கைது, கலவரம், குற்றச்சாட்டு, போலீசார், இளைஞர்கள், திரண்டனர்

இதுபற்றி எதுவும் தெரியாத போலீசார், ஒரு மணி நேரம் முன்கூட்டியே திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினர்.

கூட்டத்திலிருந்த இளைஞர்கள் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் போலீசாரை நோக்கி வீசத் தொடங்கியதால் பலர் காயமடைந்தனர். இதையடுத்து கை செனட்-ஐ குண்டு கட்டாக அங்கிருந்து தூக்கிச் சென்ற போலீசார் கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை கைது செய்தனர்.

Tags :
|
|
|