Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த ஜோயா அகர்வால்

அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த ஜோயா அகர்வால்

By: Nagaraj Sat, 20 Aug 2022 10:48:39 PM

அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த ஜோயா அகர்வால்

அமெரிக்கா: அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் ஜோயா அகர்வால் இடம் பெற்றுள்ளார். விமான ஓட்டிகளில் சாதனையும், சாகசமும் புரிந்தவர்கள் பலருண்டு. பெண் விமான ஓட்டிகளும் சமீபகாலமாக விமானங்களில் பல்வேறு சாதனை புரிந்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவிலிருந்து பெங்களூரு வரை சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாக பயணம் செய்து பெண் விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து பெங்களூரு மொத்தம் 16000 கிமீ பயண தூரம். இந்த தூரத்தை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்த பெண் விமானிகள் குழு கடந்துள்ளது.

america,flight,museum,joya,appreciation,explanation ,அமெரிக்கா, விமானம், அருங்காட்சியகம், ஜோயா, பாராட்டுக்கள், விளக்கம்

இந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜோயா அகர்வால். இந்த சாதனையின் காரணமாக அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் ஜோயா அகர்வால் இடம் பெற்றுள்ளார்.

விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காகவும், உலகெங்கிலும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற விமான அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார் ஜோயா .இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Tags :
|
|
|