Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: உலகின் முதல் 3 நிலை வீரர்களை வீழ்த்தி மெத்வதேவ் சாம்பியன்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: உலகின் முதல் 3 நிலை வீரர்களை வீழ்த்தி மெத்வதேவ் சாம்பியன்

By: Monisha Mon, 23 Nov 2020 07:21:21 AM

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: உலகின் முதல் 3 நிலை வீரர்களை வீழ்த்தி மெத்வதேவ்  சாம்பியன்

உலகின் முதல் 3 நிலை வீரர்களை ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தோற்கடித்து மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை டொமினிக் தீம் 6-4 என வென்றார்.

world tennis championships,medvedev,champion,dominic theme,die breaker ,உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்,மெத்வதேவ் ,சாம்பியன்,டொமினிக் தீம்,டை பிரேக்கர்

ஆனாலும் இரண்டாவது செட்டில் மெத்வதேவ் அதிரடியாக ஆடினார். டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை மெத்வதேவ் 7-6 என தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், டேனில் மெத்வதேவ் 4-6, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 3 வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியைப் பெற மெத்வதேவுக்கு 2 மணி 43 நிமிடங்கள் தேவைப்பட்டது.


Tags :