Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா அணி உலக்கோப்பை வென்ற நாள்!

1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா அணி உலக்கோப்பை வென்ற நாள்!

By: Monisha Thu, 25 June 2020 3:23:22 PM

1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா அணி உலக்கோப்பை வென்ற நாள்!

1983ம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 25ம் தேதி) லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா உலக்கோப்பை வென்றது. இந்தியா வெற்றி பெற்று சரியாக இன்றுடன் 37 வருடம் ஆகிறது. உலக்கோப்பை வென்ற இந்திய அணி ஆல்ரவுண்டர் கபில் தேவ் தலைமையின் கீழ் செயல்பட்டது.

அந்த அணியில், சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மொகிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, எஸ்.எம்.பாட்டீல், கபில் தேவ், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, மதன் லால், சையத் கிர்மானி, மற்றும் பால்விந்தர் சந்து உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

cricket,india,world cup,kapil dev,west indies ,கிரிக்கெட்,இந்தியா,உலக்கோப்பை,கபில் தேவ்,மேற்கிந்திய தீவுகள்

இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து, ஆண்டி ராபர்ட்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், மற்றும் லாரி கோம்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியை ரன் ப்ளோ கூட விடாமல் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. பின்னர் மேற்கிந்திய தீவுகள் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் விளைவாக இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்தியா முதல் உலகக் கோப்பை பட்டம் வென்றது.

cricket,india,world cup,kapil dev,west indies ,கிரிக்கெட்,இந்தியா,உலக்கோப்பை,கபில் தேவ்,மேற்கிந்திய தீவுகள்

அப்போது, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் பால்கனியில் கோப்பையை தூக்கிய படி கபில் தேவ் நின்றது இன்னும் அனைத்து இந்திய ரசிகர்கள் மனதிலும் நீங்காமல் இருக்கும். இறுதிப் போட்டியில், மொகிந்தர் அமர்நாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார், ஏனெனில் அவர் பேட்ஸ்மேனாக 26 ரன்கள் எடுத்தார், மேலும் பவுலிங்கில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

Tags :
|