Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபில் தொடரில் 5-வது முறை கோப்பை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை

ஐபில் தொடரில் 5-வது முறை கோப்பை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை

By: Karunakaran Wed, 11 Nov 2020 10:23:08 AM

ஐபில் தொடரில் 5-வது முறை கோப்பை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை

ஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ், தவான், ரகானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷ்ப் பண்ட் சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது.

அதன் பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. அதன்படி, குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

20 crore prize,mumbai team,trophy,ipl series ,20 கோடி பரிசு, மும்பை அணி, கோப்பை, ஐபிஎல் தொடர்

இந்த இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும்.

இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.



Tags :
|