Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வங்காளதேச கிரிக்கெட் அணியில் உள்ள 3 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

வங்காளதேச கிரிக்கெட் அணியில் உள்ள 3 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

By: Karunakaran Sun, 21 June 2020 12:14:43 PM

வங்காளதேச கிரிக்கெட் அணியில் உள்ள 3 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் உலக தலைவர்கள், அதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பாகுபாடு இன்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் வங்காளதேச கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மோர்தசாவுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் காய்ச்சல் இருந்து வந்துள்ளதால், அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டாக்காவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,bangladesh cricketers,mortaza,nabeez iqbal ,வங்காளதேச கிரிக்கெட் அணி,கொரோனா  பாதிப்பு,மோர்தசா,நபீஸ் இக்பால்

இதேபோல் வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பாலின் அண்ணனும், முன்னாள் வீரருமான நபீஸ் இக்பால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர், சிட்டகாங்கில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக வங்காளதேச அணிக்காக விளையாடி வரும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் 28 வயதான நஸ்முல் இஸ்லாமும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியின் அண்ணனும், பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளருமான சினேகாசிஷ் கங்குலியின் மனைவி, மாமனார், மாமியார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சினேகாசிஷ் கங்குலி தனக்கு கொரோனா இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

Tags :