Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 5 நாடுகள் போட்டி

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 5 நாடுகள் போட்டி

By: Karunakaran Thu, 02 July 2020 3:44:32 PM

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 5 நாடுகள் போட்டி

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டியாகும். ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை சீனா பெற்றுள்ளது. அதன்பின் 2027-ம் ஆண்டு 19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.

19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற 5 நாடுகள் போட்டி போடுகின்றன. அவை இந்தியா, சவுதிஅரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆகும். இந்தியா இதுவரை இந்த போட்டியை நடத்தியதும் இல்லை. மேலும் இந்த போட்டியில் இதுவரை இந்தியா வென்றதும் இல்லை.

asian cup football tournament,5 nation,host,football ,ஆசிய கோப்பை கால்பந்து போட்டி, 5 தேசம், கால்பந்து,வாய்ப்பு

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இந்த 5 நாடுகளின் போட்டியை நடத்தும் உரிமத்தை பெற காட்டும் ஆர்வத்தை வரவேற்றுள்ளன. 19-வது ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் எனஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 17-வது ஆசிய கால்பந்து போட்டி நடைபெற்றது. பல ஆண்டுகளாக ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா போராடி வருகிறது. 2018 ஆம் ஆண்டில் இந்திய அணி கால்பந்து போட்டியில் நல்ல முன்னேற்றத்தை கண்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|