Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசல்... புதிய சாதனை படைத்த ருதுராஜ்

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசல்... புதிய சாதனை படைத்த ருதுராஜ்

By: Nagaraj Tue, 29 Nov 2022 08:15:41 AM

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசல்... புதிய சாதனை படைத்த ருதுராஜ்

அகமதாபாத்: சாதனை படைத்த ருதுராஜ்... 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார். இது தற்போது இணையத்தில் பெரிய வைரலாகி வருகிறது.

விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் போட்டியில் உத்தரப்பிரதேசம் - மராட்டிய அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது.

ruduraj,record,7 sixes,team,opener ,ருதுராஜ், சாதனை, 7 சிக்ஸர்கள், அணி, தொடக்க வீரர்

அதன்படி மராட்டிய அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப்பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். நோ பால் உள்பட 7 பந்துகளில் 43 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Tags :
|
|