- வீடு›
- விளையாட்டு›
- அகதியாக ஜெர்மனிக்கு சென்ற சிறுவன்... அசத்தும் சாதனை
அகதியாக ஜெர்மனிக்கு சென்ற சிறுவன்... அசத்தும் சாதனை
By: Nagaraj Sun, 09 Apr 2023 10:44:36 PM
ஜெர்மனி: அகதியாக சென்ற சிறுவன் சாதனை... சிரியாவில் இருந்து அகதியாக ஜெர்மனிக்கு சென்ற 11 வயது சிறுவன் ஜெர்மனியின் இளம் தேசிய செஸ் வீரராகியுள்ளார்.
ஹுசைன் பெசோவின் பெற்றோர் குடும்பத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு ஜெர்மனிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
பெசோ 4 வயதாக இருக்கும்போது அவரது தந்தை செஸ் விளையாட்டை கற்றுகொடுக்க தொடங்கினார். 6 வயதில் மாநில அளவிலாள கிளப் போட்டியில் விளையாட தொடங்கி வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார்
பெசோ. 2020-ல் ஜெர்மனியின் 10 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் முதல் இடத்தையும், கடந்த ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் 3-வது இடத்தையும் பிடித்தார். இம்மாதம் இறுதியில் குரோஷியாவில் நடைபெறும் போட்டியில் ஜெர்மனிக்காக பெசோ விளையாட உள்ளார்.
Tags :
germany |
chess |
refugee |