Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கத்தார் கால்பந்து போட்டிகளுக்கான பணியில் ஈடுபட்ட ஏராளமான தமிழர்கள்

கத்தார் கால்பந்து போட்டிகளுக்கான பணியில் ஈடுபட்ட ஏராளமான தமிழர்கள்

By: Nagaraj Tue, 20 Dec 2022 11:59:58 AM

கத்தார் கால்பந்து போட்டிகளுக்கான பணியில் ஈடுபட்ட ஏராளமான தமிழர்கள்

கத்தார்: கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு, பகல் பாராமல் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குறித்து தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்தவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த வருடம் கத்தார் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டி முதல் முறையாக அரபு உலகில் அதாவது முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் நடந்துள்ளது.


இதுதான் முஸ்லிம்கள் அதிக அளவில் நடக்கும் பகுதியில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டி. இந்த போட்டியை காண்பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு படையெடுத்தனர்.

இந்த கால்பந்து போட்டியின் இறுதியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கத்தார் நாட்டின் கடுமையான வெப்பத்தை தாங்கிக்கொண்டு உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் மைதானத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்துள்ளனர் என்று சொன்னால் அவர்களுடைய பங்களிப்பு மிகை ஆகாது.

biba,world cup,tournament,qatar,role of tamils ,பிபா, உலகக் கோப்பை, போட்டி, கத்தார், தமிழர்களின் பங்கு

இதில் ஏராளமான தமிழர்களின் பங்களிப்பும் இருக்கிறது. இது தொடர்பாக மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது ‌ இவர் தற்போது கத்தார் நாட்டில் வசித்து வரும் நிலையில், இவருடைய அணியினர் நெட்வொர்க் மற்றும் கேபிள் பொருத்தம் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விஷயத்தை இவர் மிகவும் பெருமையாக தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு தங்களுக்கு வாய்ப்பு கொடுத்த நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும் கத்தார் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு, பகல் பாராமல் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குறித்து இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Tags :
|
|