Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி குறித்து ஒரு பார்வை

ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி குறித்து ஒரு பார்வை

By: Karunakaran Wed, 14 Oct 2020 7:05:34 PM

ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி குறித்து ஒரு பார்வை

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசையில் 7-வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் டெத் ஓவரில் சொதப்புவதால் கடந்த போட்டியில் விளையாடிய ஜெகதீசனை நீக்கி விட்டு பியூஷ் சாவ்லாவை டோனி அணிக்குள் கொண்டு வந்தார்.

இதனால் தீபக் சாஹர், சாம் கர்ரன், வெயின் பிராவோ, ஷர்துல் தாகூர், கரண் சர்மா, சாவ்லா, ஜடேஜா என ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினார். இந்த காம்பினேசனை வைத்துக் கொண்டு சேஸிங் செய்ய கடினமாக இருக்கும் என்பது டோனிக்குத் தெரியும். டாஸ் சிஎஸ்கேவுக்கு சாதகமாக விழ, டோனி கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்ஸ்மேன்களிடம் எப்படியாவது 160 ரன்களை தாண்டிவிட வேண்டும் என திட்டமிட்டு, சாம் கர்ரனை டு பிளிஸ்சிஸ் உடன் தொடக்க ஜோடியா களம் இறக்கினார்.

chennai super kings,seven bowlers,ipl,hydrabad team ,சென்னை சூப்பர் கிங்ஸ், ஏழு பந்து வீச்சாளர்கள், ஐ.பி.எல்., ஹைதராபாத் அணி

சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் அடித்தார். ஆனால் டு பிளிஸ்சிஸ் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 35 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் வாட்சனுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் இன்னிங்சை மெதுவாக நகர்த்தினர். வாட்சன் - அம்பதி ராயுடு ஜோடி 45 பந்தில் 50 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணி 13.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டெத் ஓவரில் 58 ரன்கள் குவிக்க சிஎஸ்கே 167 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், பேர்ஸ்டோவை சாய்த்து விட சாம் கர்ரன் பந்து வீசினார். அதன்படி, 2-வது ஓவரில் வார்னனை 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். ஜடேஜா பேர்ஸ்டோவை 23 ரன்னில் வெளியேற்றினார். 17-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் விஜய் சங்கர் (12) வெளியேற்றினார்.

18 பந்தில் 46 ரன்கள் இருந்த நிலையில், கரண் சர்மா வீசினார். முதல் பந்தில் கேன் வில்லியம்சன் பவுண்டரி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் வில்லியம்சனை தூக்கினார் கரண் சர்மா. கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்களே தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் அந்த ஓவரை அட்டகாசமாக வீசி ரஷித் கானை அவுட்டாக்கி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க 20 ரன்னில் வெற்றி வாகை சூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்.


Tags :
|