Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பாரிசில் கிரிக்கெட் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா

பாரிசில் கிரிக்கெட் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா

By: Nagaraj Sat, 26 Aug 2023 11:07:35 PM

பாரிசில் கிரிக்கெட் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா

பாரீஸ்: இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், உலக கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடிகை மீனா 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பாரீஸில் அறிமுகம் செய்தார்.

actress,cricket,introduction,meena,paris,world cup , அறிமுகம், உலகக் கோப்பை, கிரிக்கெட், நடிகை, பாரிஸ், மீனா

இதன் மூலம் இந்த கோப்பையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய நடிகை என்ற பெருமையை நடிகை மீனா பெற்றார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட கோப்பையுடன் நடிகை மீனா நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Tags :
|
|