Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாவே அணி வீரர்களின் அசத்தல் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாவே அணி வீரர்களின் அசத்தல் வெற்றி

By: Nagaraj Tue, 09 Aug 2022 10:15:39 AM

வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாவே அணி வீரர்களின் அசத்தல் வெற்றி

ஹராரே: வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிக்கந்தர் ராஜா, ரெஜிஸ் சகப்வா சதம் விளாச, ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஜிம்பாவே அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இரண்டாவது போட்டி ஹாரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே 'பீல்டிங்' தேர்வு செய்தது.

crazy win,zimbabwe,second,odi,lead ,
அசத்தல் வெற்றி, ஜிம்பாவே அணி, இரண்டாவது, ஒருநாள் போட்டி, முன்னிலை

வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் (50), மகமதுல்லா (80*), ஆபிப் ஹொசைன் (41), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (38) கைகொடுக்க, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 290 ரன் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.

சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி 49 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த சிக்கந்தர் ராஜா, கேப்டன் ரெஜிஸ் சகப்வா சதம் கடந்து அசத்தினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 201 ரன் சேர்த்த போது சகப்வா (102) அவுட்டானார். ஆபிப் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டோனி முனியோங்கா வெற்றியை உறுதி செய்தார்.

ஜிம்பாப்வே அணி 47.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 291 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சிக்கந்தர் (117), முனியோங்கா (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

Tags :
|
|