Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனிருத்

டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனிருத்

By: Karunakaran Tue, 07 July 2020 2:29:18 PM

டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனிருத்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்த எம்எஸ் டோனிக்கு இன்று 39-வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல சினிமா இசைப்பாளர், எம்எஸ் டோனிக்கு ரஜினி ஸ்டைலில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். ரஜினி ஸ்டைலில் மியூசிக் மூலம் தனது வாழ்த்தை கூறியுள்ளார். பின்னணி இசையுடன் ஒவ்வொரு எழுத்தாக ‘SUPER STAR RAJINI’ வந்தபோது தியேட்டர், ரசிகர்களின் கைத்தட்டலால் அதிர்ந்தது. அதன்பின் ரஜினி நடித்த படங்களில் யார் இசை அமைத்தாலும் இந்த பின்னணி மியூசிக்குடன் தான் அவரது பெயர் தோன்றும்.

anirudh,dhoni,rajini,birthday wish ,அனிருத், தோனி, ரஜினி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்நிலையில் ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் உள்ள மரணம்... மாசு மரணம்... என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இன்று எம்எஸ் டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற விரும்பிய அனிருத் ரஜினியின் டைட்டில் பெயர் வருவதுபோல் எம்எஸ் டோனி பெயர் வருவது போல் உருவாக்கி, அதன்பின் மரணம்... மாசு மரணம்... என வரிகளுக்கு எம்எஸ் டோனி அறிமுகம் ஆவது போன்று வீடியோ உருவாக்கியுள்ளார்.

தனது இசையின் மூலம் சிறப்பான வகையில் பிறந்த நாள் வாழ்த்தை கூறியுள்ளார். அனிருத் வெளியிட்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. எம்எஸ் டோனிக்கு இன்று கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல பிரபலங்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Tags :
|
|