Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • விதிமுறையெல்லாம் மற்ற வீரர்களுக்குதானா? விராட்கோலிக்கு கிடையாதா; சேவாக் கடும் விமர்சனம்

விதிமுறையெல்லாம் மற்ற வீரர்களுக்குதானா? விராட்கோலிக்கு கிடையாதா; சேவாக் கடும் விமர்சனம்

By: Nagaraj Sat, 05 Dec 2020 7:14:55 PM

விதிமுறையெல்லாம் மற்ற வீரர்களுக்குதானா? விராட்கோலிக்கு கிடையாதா; சேவாக் கடும் விமர்சனம்

விதிமுறையெல்லாம் மற்ற வீரர்களுக்கு மட்டும்தானா, கேப்டன் கோலிக்கு பொருந்தாதா என்று முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

ஆஸ்திேரலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றாலும் அணியில் முக்கிய வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இல்லை.

ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்ட பின்புதான் கன்கஸனில் சாஹல் பந்துவீச வந்தார். இல்லாவிட்டால் சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஏற்கெனவே ஒரு கீப்பர் கே.எல்.ராகுல் இருக்கும் போது, சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, மணிஷ் பாண்டேவும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அருமையான ஃபார்மில் இருக்கும் ஜடேஜா 7-வது வீரராகவே களமிறக்கப்பட்டார்.

sehwag,rules,captain goalie,review ,சேவாக், விதிமுறைகள், கேப்டன் கோலி, விமர்சனம்

இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளுடன் கேப்டன் கோலி அணி வீரர்களைத் தேர்வு செய்துள்ளதை முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து 4-வது இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால், அவரை நேற்று நடந்த டி20 போட்டியில் அமர வைத்துள்ளார் கோலி. எந்த அடிப்படையில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. விதிமுறை என்றால் அது அனைவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஆனால், அணியில் 10 வீரர்களுக்கு மட்டும்தான் விதிமுறை, கேப்டன் கோலிக்கு இல்லையா.

பேட்டிங் வரிசையிலும் கோலி தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்ளமாட்டார், தான் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்தால்கூட யாருக்கும் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்கமாட்டார். கன்கஸன் விதியைப் பொருத்தவரை ஜடேஜாவுக்கு பதிலாக சாஹலை தேர்வு செய்து இந்திய அணி விளையாட வைத்தது சரியானதுதான்.

ஜடேஜாவால் விளையாட முடியாத சூழலில்தான் சாஹல் விளையாடினார். இது இந்திய அணிக்கு கிடைத்த வாய்ப்பு.
ஜடேஜாவுக்கு பந்து தாக்கியதற்கான அறிகுறிகள், வலி போன்றவே தெரிய சிறிதுநேரம் ஆனது. அதானால்தான் ஓய்வறைக்குச் சென்று கன்கஸனைத் தேர்வு செய்தார். ஆதலால், கன்கஸன் வாய்ப்பை இந்திய அணி தவறாகத் தேர்வு செய்தது என குறை கூறமுடியாது.

ஆதலால் ஆஸி. அணி இதில் இந்திய அணியை புகார் கூறக்கூடாது. இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

Tags :
|
|