Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஜமைக்காவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி

ஜமைக்காவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி

By: Nagaraj Thu, 29 Sept 2022 07:50:58 AM

ஜமைக்காவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி

நியூஜெர்ஸி: 100வது சர்வதேச வெற்றி... ஜமைக்காவுக்கு எதிரான நட்பு கால்பந்து ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனா வென்றது. இதில் 2 கோல்கள் அடித்த கேப்டன் மெஸ்ஸிக்கு 100-ஆவது சர்வதேச வெற்றியாகவும் அமைந்தது.

கத்தாரில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பல்வேறு நாடுகள் நட்பு ஆட்டங்களில் ஆடி வருகின்றன. நியூ ஜெர்ஸியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜமைக்காவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் அர்ஜென்டீனா மோதியது. முதலில் 56-ஆவது நிமிஷத்தில் லாட்ரோ மார்ட்டினஸ் முதல் கோலை அடித்தார்.

messi,argentina,qatar,title,100th win ,மெஸ்ஸி, அர்ஜென்டினா, கத்தார், பட்டம், 100வது வெற்றி

பின்னர் 86-வது நிமிஷத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார். தொடர்ந்து ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் இரண்டாவது மற்றும் வெற்றி கோலை அடித்தார் மெஸ்ஸி. கேப்டன் மெஸ்ஸிக்கு இது 100-ஆவது சர்வதேச வெற்றியாக அமைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோண்டுராஸ் அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்திலும் மெஸ்ஸி 2 கோல்களை அடித்திருந்தார். 164 ஆட்டங்களில் மெஸ்ஸி அடித்த 90-ஆவது கோலாகும். 13-ஆவது முறையாக நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள அர்ஜென்டீனா அணி கத்தாரில் பட்டம் வெல்லும் அணிகளில் முக்கியமாக கருதப்படுகிறது.

Tags :
|
|
|