Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதி போட்டி தேர்வு

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதி போட்டி தேர்வு

By: Nagaraj Mon, 25 Sept 2023 11:23:00 AM

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதி போட்டி தேர்வு

சீனா: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி... சீனாவில் ஹாங்ஸு நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய மகளிர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வங்க தேசத்துக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்க தேச அணி, அபாரமான இந்திய பந்து வீச்சில் 17 புள்ளி 5 ஓவரில் 51 ரன்களுக்குச் சுருண்டது.

இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 52 ரன்கள் எடுத்தால் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அடுத்து களமிறங்கி இந்திய அணி, 8 புள்ளி 2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Tags :