Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் விலகல்

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:52:29 AM

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் விலகல்

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ளார்.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இந்தியா குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

2012ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ந்து 15 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய 3 டெஸ்ட் போட்டித் தொடரையும் இந்திய அணி தொடர்ச்சியாக வென்றுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

bengaluru,cricket,losing,world test championship , இந்தியா, பெங்களூரு, முக்கிய வீரர், முதல் டெஸ்ட்

அதேபோல் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்டின் போது ஏற்பட்ட கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் முதல் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வந்தன.

இந்நிலையில், கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியில் பங்கேற்காத நிலையில், முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|